கனமழை எதிரொலி... சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்!!
கனமழை காரணமாக சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதேபோல் மயிலாடுதுறையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு… பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
இதனால் அப்பகுதியில் இருந்த விளைநிலங்கள் அனைத்திலும் மழை நீர் தேங்கியதோடு பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. மேலும் சாலை, வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு.. கொந்தளித்த நெட்டிசன்கள் - விளக்கமளித்த அமைச்சர் பிடிஆர்!
இதனால் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கனமழை மற்றும் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருவதால் சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.