பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டதையடுத்து என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கெனவே செய்து வந்த மாதம்26 நாட்கள் வேலையை 19 நாட்களாக குறைத்துள்ளது என்.எல்.சி. நிர்வாகம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டனர்.

கடந்த 12 ஆம் தேதி வேலை நிருத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவிக்கவே போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

ஆனாலும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை நட்த்தினர். போராட்டம் 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்ததால், என்எல்சி நிர்வாகிகளுடன், ஆட்சியர் ராஜேஷ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்களை வழக்கம்போல், 26 நாட்களாக நீட்டிக்கப்படும் என என்எல்சி நிர்வாகம் உறுதி அளித்ததால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.