முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அசத்திய தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை பாராட்டி இயக்குநர் ஷங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. 

வங்க தேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக், களத்தில் இறங்கும்போது, 2 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. பவுன்டரி, சிக்ஸ்சர் என அடித்த தினேஷ், 19-வது ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைனை தெறிக்க விட்டார். 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்றபோது, மேட்ச் பார்த்துக் கொன்டிருந்தவர்கள் எல்லோரும், சீட்டின் நுனியில் உட்கார, தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை வசமாக்கினார்.

இதனால் ஒட்டு மொத்த இந்தியர்களும் தினேஷை புகழ்ந்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கரும் 'என்ன ஒரு மெமரபிள் கிளைமேக்ஸ், ஹீரோவுக்கு ஹேட்ஸ் ஆஃப்' என தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெற்றி வீரர் தினேஷுக்குத் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சங்சர் தனக்கு பிடித்த படங்களைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பகிர்வ்தை வழக்கமாக கொண்டுள்ளார். அதில் பெரும்பாலும் திரைப்படங்கள் குறித்த பதிவாகத்தான் இருக்கும். ஆனால், இப்போது கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை பாராட்டியுள்ளார்.