director barathiraja arrest
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர், பாரதி ராஜா, கௌதமன் உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை அண்ணா சாலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் முதன்மையாக முன் வைக்கப்பட்ட கருத்து என்றால் இன்று சென்னை CSK அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இன்று நடைபெற உள்ள போட்டியை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நடைபெற்றும் கொண்டிருக்கும் போது... இவர்களின் போராட்டத்தை கலைக்கும் விதத்தில் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதே போல் காவிரி மேலாண்மைக்காக போராடிய இயக்குனர் களஞ்சியம் மற்றும் சுசீந்தரனை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
