திண்டுக்கல்லில் அனைத்து பாடங்களிலும் செண்டம் எடுத்து தச்சு தொழிலாளியின் மகள் சாதனை

தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்து பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

dindigul student nandhini scored 600 out of 600 in 12th public exam

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கியது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகளை இன்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 600க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். 

கேரளாவில் 10 பேரை பலி கொண்ட அரிசி கொம்பன் யானை அரசுப் பேருந்தை துரத்தியதால் பரபரப்பு

dindigul student nandhini scored 600 out of 600 in 12th public exam

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தனக்கு ஊக்கமளித்து தற்போது அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற உறுதுணையாக இருந்ததாக மாணவி தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். மாணவி நந்தினியின் தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios