Asianet News TamilAsianet News Tamil

அப்போல்லோவுக்கு ஏன் வந்தார் புரோகிதர் தேவாதி? - சர்ச்சையின் பின்னனி தகவல்கள் இதோ...!!

dhevaathi in-apollo
Author
First Published Jan 7, 2017, 10:20 AM IST


கடந்த சில நாட்களாக வாட்ஸ்-ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரப்பப்பட்டு வரும் விஷயம் ஜெ.வுக்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் 23ஆம் தேதி எதற்கு அப்போல்லோ வந்தார் என்பது தான்.

கடந்த ஆண்டு செப்டம்பர் - 22ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

dhevaathi in-apollo

அதற்கு அடுத்த நாள் 23ஆம் தேதி பருத்த உடல் கொண்ட ஒரு புரோகிதர் அப்போல்லோ மருத்துவமனைக்குள் நுழைவதும் அவரை காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள் பின்பக்க வாசல் வழியாக செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பிற்கு கரணம் அன்று அப்போல்லோவிற்கு சென்ற புரோகிதர்தான் ஜெயலலிதா மறைந்த பிறகு இறுதி சடங்குகள் செய்தவர்.

இதற்கும் அதற்கும் முடிச்சி போட்டு தங்கள் கைங்கர்யத்தை அரங்கேற்றி விட்டனர் நெட்டிசன்கள்.

அதாவது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அன்றே இறந்து விட்டதாகவும், அதனால் புரோகிதர் வரவழைக்கப்பட்டு சடங்குகள் செய்தததாகவும் புது புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர்.

ஆனால் நாம் விசாரித்த வரையில் உண்மை அதுவல்ல. அந்த புரோகிதரின் பெயர் தேவாதி என்பதாகும். இவர் சென்னை டி.நகர் அகஸ்தியர் கோவில் புரோகிதர் ஆவார்.

dhevaathi in-apollo

சின்னம்மா சசிகலாவின் இஷ்ட தெய்வங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு அவர் பல ஆண்டுகளாக சென்று வருகிறார்.

அந்த வகையில் இந்த தேவாதியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே செல்வி. ஜெயலலிதவுக்கும் நன்கு அறிமுகம் ஆனவர் ஆவார்.

dhevaathi in-apollo

கார்டன் வட்டாரத்தோடும் அதிமுக தலைமையோடும் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்தான் இந்த தேவாதி.

அதனால் ஜெ. உடல் நலக்குறைவு ஏற்பட்ட உடனே அவரை எல்லோரையும் போல நலம் விசாரிப்பதற்க்காகதான் அப்போல்லோ சென்றாரே தவிர வேறு காரணங்கள் இல்லை என திட்டவட்டமாக மறுக்கிறது கார்டன் தரப்பு.

dhevaathi in-apollo

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வரை சந்திக்க சென்றது தவறா? என தன்னை பற்றி வரும் தவறான தகவலால் நொந்து பொய் தலையில் அடித்து கொள்கிறாராம் தேவாதி.

இதில் போயஸ் கார்டன் வட்டாரத்துக்கு மிக நெருக்கமாக இருந்த இந்த புரோகிதரே இறுதி காரியங்களையும் செய்ததால் அவர் அப்போல்லோ சென்ற வீடியோவையும் முடிச்சி போட்டு சர்ச்சையை கிளப்புகின்றனர் நெட்டிசன்கள்.   

Follow Us:
Download App:
  • android
  • ios