இன்சூரன்ஸ் பணத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்த கணவனை, மனைவி கொன்றுள்ள சம்பவம் தருமபுரியில் நடந்துள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம, காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ் (45). இவர் துணிக்கடை தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேவதி.  கடந்த 20 நாட்களுக்கு முன்பு, மாதேஷ், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், சடலமாக மீட்கப்பட்டார். 

அவரது உடலில் ஆங்காங்கே காயங்களும் இருந்தன. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

மாதேசின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாதேசின் மனைவி ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ரேவதி, மகன் யோகேஸ்வரன் மற்றும் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ரேவதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், விக்னேஷ் இவர்கள் ஐந்து பேரும் மாதேஷை கொன்றுள்ளது தெரியவந்தது.

அங்குள்ள சிமெண்ட் குடோனில் வைத்து மாதேசை கொன்று, சடலைத்தை காரில் கடத்தி, காரிமங்கலம் நெடுஞ்சாலை ஓரத்தில் வானம் மோதி இறந்ததுபோல் செட்டப் செய்தது தெரியவந்தது.

இந்த கொலைக்கான முக்கிய காரணம், மாதேஷ் எடுத்துள்ள இன்சூரன்ஸ் பணம்தான். மாதேஷ் இரண்டு ஐந்து லட்சத்துக்கான இன்சூரன்சும், 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மற்றொரு இன்சூரன் ஒன்றும் செய்துள்ளதை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை ரேவதி கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.