கஞ்சா விற்பனை பற்றி புகார் கொடுங்க.! பொதுமக்களுக்கு வெகுமதி - டிஜிபியின் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0
கஞ்சா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் குற்றச்செயல்களும் அதிகரித்தவாறு உள்ளது.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 60.12. 2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை தமிழக போலீசார் நடத்தினார்கள்.
இதில் தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்து 723 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் கஞ்சாவிற்பனை முற்றிலும் ஒழியவில்லை. இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4. 0 நடவடிக்கையை போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க..2 முறை கர்ப்பம்.. பேஸ்புக் காதல்! 23 வயது பெண்ணை சகோதரர் உடன் சீரழித்த போலீஸ்! அதிர்ச்சி சம்பவம்
கஞ்சா பதுக்கல்மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கஞ்சா விற்பனை தொடர்பான தகவல் கிடைத்தால் 044 28447701 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், tndgpcontrolroom@gmail. com என்ற இ-மெயில் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு அவர்களுக்குத் தக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ