Asianet News TamilAsianet News Tamil

போலீசார் தயாராக இருக்க வேண்டும்... அதிரடி உத்தரவு பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!!

புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

dgp sylendra babu has directed the police to be ready to help those affected by the storm
Author
First Published Dec 7, 2022, 7:58 PM IST

புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதே நேரத்தில் வடஇலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஒன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இணைந்துள்ளது.

இதையும் படிங்க: விவசாயிகளின் நலனுக்காக ரூ.15.40 கோடி மதிப்பிலான திட்டங்கள்... தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இதனால் இந்த இரு காற்றழுத்தங்களின் இணைப்பு மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும், நாளை காலை வடதமிழகம் - புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இதனால் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது உத்தரவில், புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ காவல் ஆணையர், மாவட்ட எஸ்.பி.க்கள் தயாராக இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க வேண்டும். மீட்பு பணிகளால் ஈடுபட நீச்சல் வீரர்கள் 50 பேர் கொண்ட அணி தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios