ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், துணை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணிகளாக பிளவுபட்ட அதிமுக, கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.
அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், துணை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று கூறியிருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் துணை முதலமைச்சர் என்ற பதவி இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.