Asianet News TamilAsianet News Tamil

திருக்குறளை பொருளுடன் ஒப்பித்த டென்மார்க் மாணவிகள் - நெகிழ்ச்சியில் புகழ்ந்து தள்ளிய அமைச்சர்...

Denmark students tell Tirukurali with meaning - Minister praised
Denmark students tell Tirukurali with meaning - Minister praised
Author
First Published Feb 8, 2018, 7:53 AM IST


திருவள்ளூர்

திருக்குறளை அதன் பொருளுடன் ஒப்பித்த வெளிநாட்டு மாணவிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நெகிழ்ச்சி அடைந்து பரிசுகளை வழங்கி வெகுவாக பாராட்டினார்.

திருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழுமங்களின் சார்பில், மாணவர் பண்பாட்டு புலம் பெயர் பயிற்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதனடிப்படையில், இந்த ஆண்டில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 13 மாணவிகளும், 3 ஆசிரியர்களும் வருகைத் தந்தனர். இவர்கள் நிகேதன் கல்வி குழுமத்தின் விடுதிகளில் தங்கியிருந்து தமிழகத்தின் சிறப்புகளையும், பண்பாடு நிகழ்வுகளான கிராமிய ஆடல், பாடல்களையும் கண்டு களித்தனர். மேலும், இவர்கள் இன்று குழமத்தில் தான் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வெளிநாட்டு மாணவிகள் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனை அவரது அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

அப்போது, அவர்கள், திருக்குறளை ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம் ஒப்பித்துக் காட்டினர். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக ரூ.10 ஆயிரமும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டு மாணவிகள் தமிழ் மீது வைத்துள்ள பற்றை அவர் வெகுவாகப் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.  

இந்தச் சந்திப்பின்போது, ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் விஷ்ணுசரண், இயக்குநர் பரணிதரன், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
 
ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவ, மாணவிகள் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் தமிழ் இருக்கைக்கு ரூ.7.50 இலட்சம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios