Dengu killd chindren death

காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்ச்ல வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.

டெங்கு பாதிப்பால் சேலம் மாவட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. 

டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த வருகின்றன. ஆனாலும், டெங்கு காய்ச்சல் காரணமாக
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த
சிறுமி சஞ்சனா (6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறு ஜெனிதா (3) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். அம்பத்தூரை சேர்ந்த சிறுமி ஜெனிதா, காய்ச்சல் காரணமாக
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிந்தார். இதேபோல், அம்பத்தூரை சேர்ந்த மற்றொரு சிறுமி திவ்யபாரதி (6) இன்று உயிரிழந்தார்.

தமிழக அரசு, டெங்குவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.