ஆர்கே நகர் இடைதேர்தலுக்காக  நியமிக்கப்பட்ட  சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் பத்ரா   டெல்லி விரைந்தார். இவர் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியை சந்தித்து ஆர். கே நகரில் பணபட்டுவாடா செய்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார்.

சென்ன ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதிமுக அம்மா கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக அனைத்து கட்சியினரும் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர் .

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்  மற்றும் அதிமுக  கட்சியை சேர்ந்து  முக்கிய  நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரிசோதனை  நடத்தப்பட்டது . அதில் முக்கிய  ஆவணங்களும் சிக்கி உள்ளது .

தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ள, பணபட்டுவாடா குறித்த  அறிக்கையில்  முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேர், 89 கோடி  ரூபாய்க்கும் மேல் பணபட்டுவாடா செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வருமான வரி  சோதனையில் சிக்கிய அனைத்து ஆவணங்களின் நகல்களை எடுத்துக் கொண்டு , சிறப்பு தேர்தல்  கண்காணிப்பாளர்  விக்ரம் பத்ரா டெல்லி விரைந்தார்.

இவர் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையர்  நஜீம் ஜைதியை சந்தித்து ஆர். கே நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலை ஒத்திவைப்பது  குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளனர் .

இன்று இரவு அல்லது  நாளை காலைக்குள்  ஆர் .கே நகர்  இடைதேர்தல் ஒத்திவைப்பது  குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம்  வெளியிடும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது .