நாட்டு துப்பாக்கியோடு மான் வேட்டைக்கு சென்றவர்கள் சிசிடிவியால் சிக்கிய சம்பவம்.. அப்பறம் என்னாச்சு..?
கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ஒரு கரை கர்நாடக வனப்பகுதியாகவும் மற்றொரு கரை தமிழக வனப்பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடப்படுவதாக அம்மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கரையோர வனப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை பொருந்தி, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க:terrorist: Home Ministry: 10 பேர் பயங்கர தீவிரவாதிகள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
இதனிடையே ஆலம்பாடி வனத்துறை பகுதியில் மூன்று பேர் நாட்டுதுப்பாக்கி மற்றும் ஏர்கன் வைத்து சுற்றி திரிவதும் மானை வேட்டையாடி தமிழக பகுதிக்கு எடுத்து செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை ஆய்வு செய்த கர்நாடக வனத்துறையினர் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஒகேனக்கல் வனத்துறையின் உதவியுடன், அந்த மூன்று பேரை கைது செய்தனர்.
ஒகேனக்கல் அடுத்த ஏர்காடு பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து(27), அவரது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த டாக்டர் கவின்குமார் (27) மற்றும் விக்னேஷ்(25) என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கர்நாடக வனத்துறையினர் அவர்களை கொள்ளேகால் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் படிக்க:டிஜிட்டல் மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்கள்.. மியான்மரில் சிக்கி தவித்த 13 பேர் மீட்பு..