Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை….தீபக் அதிரடி பேட்டி..

deepak
Author
First Published Dec 21, 2016, 12:02 PM IST


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை….தீபக் அதிரடி பேட்டி..

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வை  கைப்பற்ற சசிகலா தரப்பினர் பெருமுயற்சி எடுத்து வருகினறனர். தற்காலிகமாக ஓபிஎஸ் ஐ முலமைச்சராகியுள்ள அவர்கள் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு சசிகலாவே முதலமைச்சராகி விடலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன்  மகள் தீபா வை அரசியலுக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தீபா,ஜெயலலிதாவின் பெயரையும் புகழையும் காக்க அரசியலுக்கு வர தயாராக  இருப்பதாக தெரிவித்தார்.   மேலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பல்வேறு புகார்களை தெவித்துள்ளார்.

அக்கா இப்படி இருக்க தீபாவின் உடன் பிறந்த சகோதரன் தீபக்கின் மனநிலையோ வேறு மாதிரி உள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா 35 ஆண்டுகள் கூடவே இருந்து கவனித்துள்ளார்.எனவே சசிகலா அதிமுக விற்கு தலைமை தாங்கலாம் என்றார்.அவரால் கண்டிப்பாக அதிமுகவை வழி நடத்த முடியும் என்றும் தீபக் குறிப்பிட்டார்.

அதிமுக ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி. என்றும் அதற்கு யார் தலைமை தாங்கலாம்  என்பது பற்றியும் கட்சியின் தலைவர் யார் என்பதையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். என்றார் .ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறிய தீபக் அப்பலோ மருத்துவமனையில் ஜெ சிகிச்சை பெறும் போது தானும் கூடவே இருந்ததாக தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினரின்  கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு,

தான் யாருடையை கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும், யாருடை கட்டுப்பாட்டிலும் இருக்க மாட்டேன் என்றும் தீபக் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios