முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன். தாய் சந்தியா. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமார். இவருக்கு தீபா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

ஜெயலலிதா, சினிமா நட்சத்திரமாக இருந்த கால கட்டத்தில், உறவினர்களுடன் வசித்தார். கடந்த 1980ம் ஆண்டுக்கு பிறகு, அவர் சினிமாவில் இருந்து வெளியேறி தீவிர அரசியலில் ஈடுபட்டார். இதனால், உடன் பிறந்த அண்ணன் குடும்பத்தை பிரிய நேர்ந்தது.

அரசியல் பிரவேசத்துக்கு முன்பு ஜெயலலிதா, தனது அண்ணன் ஜெயராமன், அண்ணி, அண்ணன் குழந்தைகளுடன் ஜெயலலிதா சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள தீபா, ஒரு காலத்தில் மழலையாக இருந்தபோது, அவரை தனது தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்தார் ஜெயலலிதா.

1979ம் ஆண்டில் தீபா 4 வயது குழந்தையாக இருந்தபோது, “அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா… ஆடும் வரை ஆடிவிட்டு, அல்லி விழி மூடம்மா”என்ற பாடலை பாடி தூங்க செய்வராம்.

இதை இன்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் இதுவரை யார் கண்ணுக்கும் தெரியாத சில உறவுகளும் கூறுகின்றனர்.