- Home
- குற்றம்
- இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
சேலத்தில் ஆசிரியை பாரதி, திருமணமான உதயசரண் என்பவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில், சினிமா பார்த்துவிட்டு திரும்பியபோது பாரதியை தலையணையால் அமுக்கி உதயசரண் கொலை செய்துள்ளார்.

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி(38). திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுக பிரமுகரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பாரதி சேலம் சங்கர் நகரில் உள்ள டியூஷன் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். அங்கேயே தங்கிக்கொள்வார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் உயர் பொறுப்பில் இருந்து உதயசரண் (49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் உதயசரணுக்காக தங்கத்தில் காப்பு ஒன்றை பாரதி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அதனை உதயசரண் விற்பனை செய்து செலவு செய்துவிட்டார். இதுபற்றி பாரதிக்கு தெரிய வந்ததை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் உதயசரணின் மனைவிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவி கணவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி உதயசரணிடம் டார்ச்சர் செய்துள்ளார். அப்போது தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் உண்மையை பாரதியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாரதி பாரதி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவ்வப்போது பாரதியை சமாதானம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் நைட்ஷோ சினிமாவுக்கு சென்றுவிட்டு திரும்பினர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் விவாகரத்து பேச்சு தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட நிலையில், உதயசரண் பாரதியை கடுமையாக தாக்கி தள்ளிவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து உதயசரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

