Decision to increase AC boxes - Railway activity for summer time

கோடை காலத்தை முன்னிட்டு ரயில்களில் ஏ.சி.பெட்டிகள் அதிகரிக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

கோடை காலம் என்றாலே மக்கள் வெளியே வர பயபடுவார்கள். அதுவும் இந்த முறை சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது.

தற்போது வரை திருத்தணியில் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வேலூரில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.

சென்னையில், 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது.

வேலூர், தருமபுரி, நாமக்கல், மதுரை, கரூர், சேலம், திருச்சியில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே வெப்பத்தை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு ரயில்களில் ஏ.சி.பெட்டிகள் அதிகரிக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.