கடலூர்,

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

இதற்கு மாவட்ட அமைப்பாளர் மணிகண்டராஜா தலைமை தாங்கினார். ஜெகன் வரவேற்பு வழங்கினார்.

இந்த கருத்தரங்கில் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும், அரசாணை 92–யை முழுமையாக நடைமுறைபடுத்த கோரியும், பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் சென்னையில் வருகிற ஜனவரி மாதம் 21–ந்தேதி நடக்கும் தேசிய மாணவர் உரிமை மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கருத்தரங்கில் மாநில செயலாளர் பாரதிபிரபு, மாநில துணை செயலாளர்கள் ஸ்ரீதர், நீதிவள்ளல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மண்டல செயலாளர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் முற்போக்கு மாணவர் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் மாணவர் பிரதாப் நன்றி கூறினார்.