திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக காணிக்கை செலுத்தும் புதிய வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய உலகத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் வர்த்தகத்தையே, பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இந்த ஆன்லைன் வர்த்தக சேவையானது தற்போது கோவில்களிலும் அமலுக்கு வந்துள்ளது.

திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வசதிக்காக ஆலயத்தில் 42 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நாட்டில் உள்ள ரூபாய் நோட்டு பிரச்சினை காரணமாக, கோவில்களில் கூட மக்களால் காணிக்கை செலுத்த முடியவில்லை. எனவே, பக்தர்களின் வசதிக்காக ஆலயத்தின் இரண்டு இடங்களில் இ-உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் பக்தர்கள் தங்களது கிரெடிட் கார்டு மூலமாகவும், டெபிட் கார்டு மூலமாகவும் காணிக்கை செலுத்த முடியும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வசதியானது நாடு முழுதும் உள்ள பெரிய ஆலயங்களில் நடை முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.