தயாநிதி மாறன் வங்கி கணக்கிலிருந்து பணத்தை ஆட்டைய போட்ட மர்ம கும்பல்- வெளியான பகீர் தகவல்
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறனின் வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பல் ஒரு லட்சம் ரூபாயை நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாநிதி மாறன் வங்கியில் இருந்து பணம் திருட்டு
திமுகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் தயாநிதி மாறன், இவர் கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்தநிலையில் தனது வங்கி கணக்கில் இருந்து 99ஆயிரம்999 ரூபாய் திருடப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி இணைந்து இணைப்பு வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும் தயாநிதி மாறனின் மனைவியின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்,
பணம் கொள்ளை- தயாநிதி புகார்
ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கியில் அப்பேட் செய்ய வேண்டியுள்ளதாக பேசியுள்ளனர். இந்தியில் பேசிய நபர்கள் ஓடிபி கேட்டுள்ளனர். ஆனால் தயாநிதி மாறனின் மனைவி ஓடிபி கொடுக்கவில்லை. இருந்து போதும் அடுத்தடுத்து 3 முறை தொடர்பு கொண்ட கும்பல் பேசிய ஒரு சில நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்து 99ஆயிரம்999 ரூபாய் மாயமாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தகவல் தெரிவித்ததையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் தயாநிதி மாறன் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து அந்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
தற்கொலைக்கு காரணம் இதுதான்.. தமிழக மருத்துவ மாணவர் தற்கொலை.! அதிர்ச்சி சம்பவம்.!!