விசிக சார்பில் ரூ. 10 லட்சம் புயல் நிவாரண நிதி.. முதலமைச்சரிடம் நேரில் வழங்கிய திருமாவளவன்..
விசிக சார்பில் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சரிடம் வழங்கினார்.
மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாத பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தண்ணீர் வடியத்தொடங்கியதால் சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனினும் தாழ்வான பகுதிகள், நீர்நிலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மற்றும் பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புத்துறை, காவல்துறையினர் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தனது ஒரு மாத ஊதியத்தை, நிவாரன உதவிக்கு வழங்கிய அவர் மற்ற சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களும் நிதி அளித்திட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விசிக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இணைந்து ரூ.10 லட்சத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
சென்னையில் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்..
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் “ அண்மையில் பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. தமிழக அரசு, அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நிவாரண பணிகளுக்கு ரூ.5000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.1000 கோடி வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு மீண்டும் தமிழகத்தை வஞ்சித்துள்ளது. தனது ஒரு மாத ஊதியத்தை, நிவாரன உதவிக்கு வழங்கிய முதலமைச்சர் மற்ற சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களும் நிதி அளித்திட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி விசிக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளத்துடன் விசிக கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாயை பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம். கடந்த காலங்களை விட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாது. அரசு தனது சக்திக்கேற்ப மீட்பு பணிகளை செய்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.