சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.6000: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவருக்கும் நிவாரண தொகை ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக ரூ.6,000 வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் அதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு இல்லாதர்வர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஏதேனும் அளவீடுகளின்படிதான் நிவாரணம் வழங்க முடியும். அதன்படி ரேஷன் கார்டு அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டிருப்பவரக்ள் அரசிடம் முறையீடு செய்யலாம் என்றார்.
தமிழக அரசின் புயல் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண திட்டங்களை விமர்சிப்போருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “2011 டிசம்பரில் 'தானே' புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள். 2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த 'ஒக்கி' புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர். 2018ல் 'கஜா' புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார். ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம்.” என்றார்.
டிச.,14ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கிறார்!
அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்ற அவர், டெல்லியில் உள்ள தலைவர்களை போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என நாங்கள் கூறவில்லை. இயற்கை பேரிடட் ஏற்பட்டால் அதனை எப்பாடி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் தமிழக அரசு செயல்பட்டது. அதேபோல், தற்போது பெருவெள்ளத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.
தமிழக அரசு தரும் ரூ.6000 நிவாரண தொகையை மத்திய அரசு தருவதாக அண்ணாமலை சொல்லிக் கொண்டிருக்கிறார். விமர்சனங்களை முன்வைக்கும் அண்ணாமலை, நாம் கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும் எனவும் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.10,000 கோடி நிவாரணமாக கேட்டார். அதனை ஒப்பிடும் போது இப்போது ரூ.5,060 கோடிதான் கேட்கப்பட்டுள்ளது எனவும் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார்.