வடகிழக்கு பருவமழை துவங்க நாளாகலாஅம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த போதிலும் சரியான நேரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி விட்டது என்றே கூறலாம். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு பருவ மழை துவங்க ஆரம்பித்துள்ளதற்கு அச்சாசரமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. விசாகபட்டின அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. 

விசாகபட்டினம் அருகே மையம் கொண்டுள்ள இந்த புயலானது வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது, இதனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதையொட்டி சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன்,தூத்துக்குடி , புதுச்சேரி ,கரைக்கால் பகுதிகளில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் மழை துவங்கியுள்ளதால் இந்த தீபாவளி நெருக்கத்தில் ஷாப்பிங் செல்பவர்கள் மழையில் சிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகையும் மழையுடன் கொண்டாடும் பண்டிகையாக மாற வாய்ப்புள்ளது.