வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், பாம்பன், நாகை, உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி காரணமாகவும் இலங்கை அருகே காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது.

அது வட மேற்கு திசையில் நகர்வதால் தெற்கு கேரளா, லட்சத்தீவு, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், பாம்பன், நாகை, உள்ளிட்ட துறைமுகங்களில்1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.