Asianet News TamilAsianet News Tamil

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டி.. திறந்து பார்த்த சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி- நெளிந்து ஓடிய பாம்பு, ஓணான்

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அரிய வகை பாம்புகள், ஓணான் உள்ளிட்ட உயிர் இனங்களை கடத்தி வந்த இரண்டு பேரை பிடித்து  போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

Customs confiscated rare species smuggled from Singapore to Coimbatore KAK
Author
First Published Nov 10, 2023, 1:22 PM IST | Last Updated Nov 10, 2023, 1:22 PM IST

அரியவகை உயிரினங்கள் கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடந்த வந்த நிலை மாறி தற்போது அரியவகை உயிரினங்களை கடத்தப்படும் சம்பவம் கடந்த சில வருடங்களாக தொடர்கிறது. அந்த வகையில் தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அரிய வகை குரங்கு, அணில், ஆமை, ஓணான் போன்றவை கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களும் அரிய வகை உயிரினங்களை வாங்கி தங்களது செல்ல பிராணியாக வளர்த்து வரும் பழக்கும் தற்போது அதிகரித்துள்ளது.

Customs confiscated rare species smuggled from Singapore to Coimbatore KAK

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

இந்தநிலையில்  கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் கோவை வந்துள்ளது. அதிலிருந்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியில் இந்தியாவில் வளக்க தடை விதிக்கப்பட்ட அரிய வகை உயிரினங்களை கொண்டு வந்துள்ளனர். விமான நிலையத்தில் சோதனை அதிகளவு இருந்த காரணத்தால் தங்களது பெட்டிகளை விமான நிலையத்திலையே விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து நேற்று  பெட்டியை பார்த்த சுங்க அதிகாரிகள் அதனை பிரித்து பிரித்து பார்த்துள்ளனர். அதில்  அரிய வகை பாம்பு,  சிலந்தி,  ஒணான் உள்ளிட்டவை இருந்துள்ளததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ஒரு பையில் மட்டும் சுமார் 11 ஆயிரம் சிறிய வகையிலான ஆமைகள் இறந்த நிலையிலும் உயிருடனும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Customs confiscated rare species smuggled from Singapore to Coimbatore KAK

பாம்பு, ஓணான், ஆமை பறிமுதல்

இதனையடுத்து உயிரினங்களை கடத்தி வந்த நபர்களாக டோம்னிக்,  ராமசாமி ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த உயிரினங்களை தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்துள்ளது, தற்போது இந்த உயிரினங்களை திருப்பி அனுப்புவது குறித்து வனத்துறை உடன் சுங்கத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

பல வருடமாக இந்த கோயிலை வணங்குறேன்..சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை அதனால பெட்ரோல் குண்டு வீசினேன்- வாக்குமூலம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios