15-10-2022 அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதன் மூலம் இந்த கடுமையான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) NH 5 - NH 16-க்கு சொந்தமான நிலம் / நடைபாதை மற்றும் CMWSSB இன் கழிவுநீர் அமைப்பு சட்டத்திற்குப் புறம்பாக துரித உணவுக் கடைகளுக்காகவும் மற்றவற்றிற்காகவும் சிலர் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளால், சாலையின் அகலம் குறைந்து, வழக்கமான போக்குவரத்து தடைப்பட்டு வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி நேறும் வாகன விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.
இந்த ஆக்கிமிப்புகள் தொடர்பாக, எண்.207, ஜிஎன்டி ரோடு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னை - 600066 இந்த இடங்களில் அமைந்துள்ள சாலையின் முன்புறம் உள்ள நடைபாதை மற்றும் பாதாள சாக்கடை அமைப்பின் மீது அனுமதியின்றி ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். புகாரளித்த பின்னரும் காவல்துறை மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழிப்போக்கர்கள்/பொதுமக்கள் மனவேதனையையும், தாளாத துயரமும் அடைந்துள்ளனர். வாகன விபத்துகளுக்கு ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் எனவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன

மேற்கூறியவற்றைத் தவிர, ஆக்கிரமிப்பாளர்கள் பொது மக்கள் அணுகக்கூடிய இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் அவைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதன் காரணமாகவே ஏராளமான வாகன விபத்துகள் ஏற்படுவதாக மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுதாரரும், வழக்கறிஞருமான என்.கோகுல ராவ் என், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பின்னர், நீதிமன்றம் வாயிலாக புதிய ஆக்கிரமிப்புகளைத் தடுக்க காவல்துறைக்கு பல நோட்டீஸ்களை அனுப்பினார். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் மின்னல் வேகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை கட்டியதால் மீட்பு நடவடிக்கைகள் வீணானது. மீண்டும் தொடர்ந்து என்.கோகுல ராவ், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைகள் போன்ற பிற அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நோட்டீஸ் அனுப்பி தொடர்ந்து போராடி வந்தார். ஆனால் அதற்கு பதிலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

