Asianet News TamilAsianet News Tamil

நகை வாங்க அலைமோதிய கூட்டம்… தினகரன் புண்ணியத்தில் அட்ஷய திருதியை கொண்டாடிய ஆர்.கே.நகர் மக்கள்…

crowd in jewel shop for akshaya tridiyai
crowd in-jewel-shop-for-akshaya-tridiyai
Author
First Published Apr 30, 2017, 10:10 AM IST


அட்சய திருதியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 275 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது. குறிப்பாக வட சென்னை பகுதியில் நகை வாங்க பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததற்கு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது பட்டுவாடா செய்யப்பட்ட பணம் தான் காரணம் என கூறப்படுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்ததது. இதற்காக திமுக அதிமுகவின் இரு அணிகள் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

crowd in-jewel-shop-for-akshaya-tridiyai

இந்த தேர்தல் பரப்புரையின்போது சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஓட்டு ஒன்றுக்கு 400 வீதம் கொடுத்தாகவும், திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினரும் பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததது.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஓட்டு போட பணம் வாங்கிய ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அந்த பணத்தைக் கொண்டு கடந்த 2 நாட்களில் வட சென்னை மற்றும் பிராட்வே பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்குச் சென்று நகை வாங்கியதாக கூறப்படுகிறது.

தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் டி.டி.வி.தினகரன் புண்ணியத்தில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அட்ஷய திருதியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios