திடீரென விரிசல் விடும் வீடுகள்… அச்சத்தில் மக்கள்… நீலகிரியில் நடப்பது என்ன?
நீலகிரியில் மக்கள் வசிக்கும் வீடுகளில் திடீர் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரியில் மக்கள் வசிக்கும் வீடுகளில் திடீர் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. மழை நின்ற 10 நாட்களுக்கு பின்னர் கூடலூரில் இருந்து உதகை செல்லும் மலைப்பாதையில் சுமார் 70 மீட்டர் நீளத்துக்கு சாலையில் பிளவு ஏற்பட்டு இரண்டு இன்ச் ஆழத்திற்கு சாலை கீழே இறங்கியுள்ளது. மேலும் அதே மலை பகுதியில் அடிவாரத்தில் உள்ள நடு கூடலூர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இதில் 7 வீடுகள் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள் ? சூப்பர் வேலைவாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது - முழு தகவல்கள் இதோ
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி கோவையை சார்ந்த புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் நிலத்தடியில் நீர் ஓட்டம் ஏற்பட்டதால் விரிசல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து பாதிப்புகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்வதற்காக மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளியில் திடீரென வெடித்த ஏசி.. அலறியடித்து ஓடிய மாணவர்கள் - பரபரப்பு சம்பவம் !
மத்திய புவியியல்துறை முதன்மை ஆராய்ச்சியாளர் அசரக் அகமத் தலைமையில் வந்த அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பாதிக்கபட்ட வீடுகறை நேரடி ஆய்வு செய்தனர். அதில் நிலத்தடியில் என்ன நடந்தது என்பது பற்றி முழு ஆய்வு மேற்கொண்டதாகவும், பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரைவில் தமிழக அரசுக்கும், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கையாக சமர்ப்பிக்கபடும் என்று தெரிவித்தனர்.