crackers factory withdraw protest

கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி முறையை அறிமுகப்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் பட்டாசு ஆலை உற்பத்திக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 28% ஜிஎஸ்டி வரியை 12% மாக குறைக்க வலியுறுத்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைதொடர்ந்து தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்டாசு உற்பத்தியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் அடுத்த ஜிஎஸ்டி குறித்த கூட்டத்தில் பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் சிவகாசி மற்றும் விருதுநகர் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களின் தலைவர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.