கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் சமபவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டடம் ஒன்று இருந்தது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தபோது, பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதில், 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து பேருந்து நிலைய கட்டடம் மிகவும் பழைய கட்டடம் என்பதாலும் உறுதியற்ற தன்மையில் இருந்ததாலும் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.