Asianet News TamilAsianet News Tamil

கோகோ-கோலா நிறுவனத்திற்கு தடையை நீக்கியதற்கு நீதிமன்றம் சொன்ன சவுக்கடி காரணம்;

Coca Cola company firing of whiplash due to the ban
court of-coca-cola-companys-firing-of-whiplash-due-to-t
Author
First Published Mar 3, 2017, 8:08 AM IST


மதுரை

தாமிரபரணியை ஒட்டி இருக்கும் அணைகளும், கால்வாய்களும் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது ஏற்படுத்தப்பட்டவை. தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவும், உபரி நீர் முழுவதும் நீர் நிலைகளுக்கு நேரடியாக செல்வதற்கும் 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், தமிழக அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சவுக்கு வீசியுள்ளது நீதிமன்றம்.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி  

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பது:

‘‘கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்படும் கோகோ-கோலா குளிர்பான தொழிற்சாலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 இலட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் குடிநீர், விவசாயம் போன்றவற்றிற்கு போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, குளிர்பான தொழிற்சாலை தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம், தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பானத் தொழிற்சாலைக்கு இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்து நிலுவையில் இருந்த வழக்கையும் இந்த வழக்குடன் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டி இருந்தனர்.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குளிர்பான நிறுவனம் சார்பில் ஏற்கனவே வாதாடப்பட்டது.

அப்போது, ‘‘இந்த வழக்கு பொதுநல நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட தனிநபர் வழக்கு ஆகும்.

தாமிரபரணியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் சிப்காட்டுக்கு வழங்கப்படும் நீரில் 0.2 சதவீதத்தை தான் எங்கள் நிறுவனம் பயன்படுத்துகிறது.

பெரும்பகுதி தண்ணீரை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்றுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் பிறப்பித்தனர்.

அதில் கூறியிருப்பது:

“நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பாசன வசதியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தாமிரபரணியை ஒட்டி 8 அணைகளும், 283 கிலோ மீட்டர் நீளத்திற்கு 11 கால்வாய்களும் செல்கின்றன. இந்த பாசன அமைப்புகள் அனைத்தும் மன்னர்கள் ஆட்சி செய்த போதும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போதும் ஏற்படுத்தப்பட்டவை.

தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து, உபரி நீர் முழுவதையும் நீர் நிலைகளுக்கு நேரடியாக செல்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவும் வருத்தம் தருகிறது.

இந்த வழக்கைத் தொடர்ந்த பிரபாகர், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்தில் வழக்கறிஞராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் நியாயமாக நடந்து கொள்ளாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

குளிர்பான நிறுவனத்துக்கும் தனக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனையைத் தீர்க்க இங்கு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் என குளிர்பான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து மனுதாரர் சுயநலத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனிப்பட்ட நலனுக்காக, பொதுநல வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. எனவே அவரது மனு உள்பட இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios