இராமேஸ்வரம்

நோயின்றி வாழ உடற்பயிற்சி தேவை என்ற காரணத்தை வலியுறுத்தி இங்கிலாந்து தம்பதி, இந்தியாவை சைக்கிளில் சுற்றி வருகின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த விமான ஓட்டுநர் சார்லஸ் (57). இவரது மனைவி ஆசிரியை சுசன்னி (55). இருவரும், விமானத்தில் நவம்பர் 4 ஆம் தேதி டெல்லி வந்தனர்.

உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டில்லியில் இருந்து சைக்கிளில் புறப்பட்டனர் இந்த தம்பத்ஹி.

ஆக்ரா, உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மகராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக கன்னியாகுமரி வந்தனர்.

நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். 1964-ல் தனுஷ்கோடியில் புயலில் இடிந்த கட்டடங்கள் முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர்.

பின், சைக்கிள் பயணத்தை தொடர்ந்த தம்பதி மதுரை, திருச்சி வழியாக சென்னைச் சென்று மார்ச் 7-ல் இங்கிலாந்து செல்ல உள்ளனர்.

வட, தென் மாநிலத்தை 4,000 கி.மீ சைக்கிளில் சுற்றி வந்த வெளிநாட்டு தம்பதியின் ஆர்வத்தை இராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்து சுற்றுலா பயணி சுசன்னி கூறுகையில், “உடற்பயிற்சி செய்தால், நோய் தாக்குதல் இன்றி நுாறு ஆண்டுகள் வாழ முடியும்.

எனவே, உடற்பயிற்சியை நம் வாழ்வில் முக்கிய பணியாக கருத வேண்டும்.

இந்தியாவில் பல கலாசார மக்கள் ஒற்றுமையுடன் வசிக்கிறார்கள். உணவு, சடங்கு முறைகள் பிரமிக்க வைக்கிறது, என்றுத் தெரிவித்தார்.