Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்கள் தொற்று பாதிப்பு.!

 தனியார் மருத்துவக் கல்லூரியான சத்யசாய் கல்லூரியில் ஏப்ரல் மாதம் கடைசியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Corona infection in 25 students at Shri Sathya Sai Medical College
Author
Chengalpattu, First Published May 6, 2022, 11:32 AM IST

செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தனியார் மருத்துவக் கல்லூரி 

செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த திருப்போரூர் பகுதியில் சத்யசாயி தனியார் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்களில் இருந்து முதலாம் ஆண்டு படிக்க மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியான சத்யசாய் கல்லூரியில் ஏப்ரல் மாதம் கடைசியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Corona infection in 25 students at Shri Sathya Sai Medical College

கொரோனா பரிசோதனை

இந்த பரிசோதனையில் 25 மாணவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி 3 பேருக்கு கொரோனா நோய்தொற்று கண்டறியபட்டது. வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்கி பயின்று வரும் மாணவர்கள் 7 பேருக்கும், அதேபோன்று விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் 7 பேருக்கு  கொரோனா நோய்த் தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona infection in 25 students at Shri Sathya Sai Medical College

சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

இந்நிலையில் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் 6 பேருக்கு என மொத்தமாக 25 பேருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios