Asianet News TamilAsianet News Tamil

வெறும் 10 நாட்களில் 9 மடங்கு அதிகரித்த கொரோனா.. சுனாமி வேகத்தில் கொரோனா.. பீதியில் மக்கள்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 9 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அதிகரிப்பு வேகமும் 500 யிலிந்து 2000 ஆக உயர்ந்துள்ளது.  
 

corona increase status in 10 days
Author
Tamil Nadu, First Published Jan 10, 2022, 9:09 PM IST

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு சார்பில் இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கபட்டுள்ளன. கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 1 ஆம் தேதி  1489 ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஜனவரி 10 ஆம் தேதி இன்று 13,990 ஆக பதிவாகியுள்ளது. இது ஜனவரி 1 ஆம் தேதியை ஒப்பிடும் போது 9 மடங்கு அதிகரிப்பாகும். சுனாமி வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை மக்கள் விழிப்புணர்வுடனும் சமூக பொறுப்புடனும் இருந்தால் மட்டுமே தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து வருகிறது. 

மேலும் அதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, மூச்சுதிணறல்,உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்து அறிகுறி இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவரகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடயே இன்று ஒரே நாளில் புதிதாக 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  நேற்று பாதிப்பு 12,895 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 1,095 அதிகரித்து 13,990  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 6186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்து 6190 ஆக பதிவாகியுள்ளது.மேலும் கொரோனா தொற்றிற்கு இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 2,547 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 1,808 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் எண்ணிகை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்த கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அதனை நீட்டிப்பதும், கூடுதல் கட்டுபாடுகள் விதிப்பதும் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில்,ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பல்வேறு கட்டுபாடுகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஜன. 14 முதல் ஜன. 18 வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை என்றும் வரும் 16ஆம் தேதியன்று மீண்டும் முழு ஊரடங்கு பின்பற்றபடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே நடைமுறையுள்ள அனைத்துக்  ஊரடங்கு கட்டுபாடுகளும் தொடர்ந்து பின்பற்றப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios