சென்னை தியாகராயர் நகரில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு எழுத்து பிழையுடன் ஜெ.அன்பழகன் மேம்பாளம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்ட நிலையில் நெட்டிசன்கள் கிண்டல்.
சென்னை தியாகராயர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தெற்கு உஸ்மான் சாலையை CTI பிரதான சாலையுடன் இணைக்கும் விதமாக ரூ.165 கோடியில் 1.2 கி.மீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பாலத்தின் மீது நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக எம்எல்ஏ அன்பழகனின் பெயரை சூட்டினார். இந்த பாலம் முழுவதும் இரும்பு தூண்களால் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு இரும்பு பாலம் உள்ளது. அதைத் தொடர்ந்து மாநிலத்தின் இரண்டாவது முழு இரும்பு பாலம் தியாகராய நகரில் திறக்கப்பட்டது.
இந்த பாலத்தின் மூல் சைதாபேட்டை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் வழியாக செல்பவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலத்தில் அண்மையில் பெயர்ப்பலகை பொறுத்தப்பட்டது. அதில் “ஜெ.அன்பழகன் மேம்பாளம்” என்று எழுத்து பிழையுடன் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலம் என்ற வார்த்தையை சரியாக எழுதத் தெரியாத உங்களுக்கு அறிவுத்திருவிழா தேவையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
