தமிழகத்தில் இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்
வெப்பச்சலனம் காரணமாக,
03.06.2022. 04.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
05.06.2022. 06.06.2022. 07.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுகுகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
03.06.2022. 04.06.2022: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென் ழக்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்துல் வீசக்கூடும்.
07.06.2022: தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் அதனை ஓட்டிய கேரளா - கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளிகள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை.! குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு சமம்-அன்புமணி
