continues 3 days leave for banks costemers finish thier wirk today itself
3 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை மக்களே…. பேங்க் வேலைய இன்னைக்குள்ள முடிச்சிடுங்க….பணம் எடுத்து வச்சுக்கோங்க !!
நாளை சனிக்கிழமை முதல் வரும் திங்கட்கிழமை வரை அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விடுமுறை இருப்பதால் வாடிக்கையாளர்கள் இன்று தங்களது வங்கி வேலைகளை முடித்துக் கொள்ளளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாளை 28ம் தேதியும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இதையடுத்து திங்கட்கிழமை 30ம் தேதியும் புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் எந்தவித பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.
அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
