செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி கட்டிடத்தை தூக்கிய போது விபத்து; ஒருவர் பலி, ஒருவர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் இரண்டடுக்கு கட்டிடதை ஜாக்கி மூலம் தூக்கிய போது மேல் பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் கர்ணம் தெருவில் லஷ்மி என்பவரின் இரண்டடுக்கு வீட்டை உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த 11 கூலி தொழிலாளர்கள் ஜாக்கிமூலம் கட்டிடத்தை உயர்த்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒருபக்க மேல் பகுதி சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டு வாகனத்தில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் பேஸ்கார்(வயது 28) என்கிற நபர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மேலும் ஓம்கார் என்பவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, மற்றொருவர் லேசான காயம் ஏற்பட்டது.
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது விபத்து; சிறுவன் உள்பட 2 பேர் பலி
விபத்து குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தை உயர்த்தும் பணியின் போது கட்டிட பொறியாளர் அருகில் இல்லை என்றும், கூலி தொழிலாளர்களுக்கு முறையாக தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் மது அருந்த பணம் தராத செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து