Conductor can not be disappointed
தமிழக அரசு பேருந்துகளில் அரை கட்டண டிக்கெட் எடுக்க விரும்புவோர் குழந்தைகளின் வயது சான்றிதழை எடுத்து செல்ல வேண்டியது அவசியம் என சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பாண்டி கூறியுள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வாங்கப்படுவதில்லை. மூன்று வயது முதல் 12 வயது வரை, அரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் வயதில், அரசு பேருந்து ஓட்டுநருக்கு சந்தேகம் எழும்போது, உயரத்தைக் கணக்கிட்டு, அரைக் கட்டணமோ, முழுக்கட்டணமோ செலுத்த வேண்டும் கூறுவார்.
சிக்கலான இந்த விஷயத்தில் பேருந்து ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் இடையே பல நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அரை டிக்கெட் எடுப்பவருக்கான வயது சான்றிதழை, எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
வயது சான்றிதழை எடுத்துச் செல்வதால், பேருந்து ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் எந்த சிக்கல் எழாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுபோலவே, அரை டிக்கெட் எடுக்க வேண்டிய பெற்றோர், தவறாமல், குழந்தையின் வயது சான்றிதழை தவறாது எடுத்து செல்ல வேண்டும் என்றும் சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பாண்டி கூறியுள்ளார்.
