Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் சிக்கலில் சசிகலா புஷ்பா..முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..தலைமறைவாக ஆக கூடாது என எச்சரிக்கை.

பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவிற்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
Conditional pre-bail for Sasikala Pushpa
Author
Tamil Nadu, First Published Feb 17, 2022, 12:33 PM IST

அதிமுக வின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி ஆக இருந்தவர் சசிகலா புஷ்பா. 
அதிரடி பேச்சுகளுக்கும் அதிரடி செயல்களுக்கும் சொந்தக்காரரான இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து மீண்டும் பூதாகரமான சர்ச்சையை கிளப்பி, ஹாட் டாப்பிக்கில் சிக்கியவர் சசிகலா புஷ்பா.

மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தன்னை கன்னத்தில் அறைந்தனர் என மாநிலங்களவையில் அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் அதிமுகவிலிருந்து விலகிய இவர்,அதிரடியாக பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைந்த சில நாட்களில் இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சசிகலா புஷ்பா தலைநகர் டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ராமசாமி சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார் எனவும், மற்றொரு படுக்கையில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் எனக் கூறினார். மேலும் அமுதா என்ற பெண்ணும் இருந்ததாகவும் வீட்டில் மதுபானங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்ததாக கூறினார்.

வீட்டுக்குள் மர்ம நபர்களை அனுமதித்து குறித்து சசிகலா புஷ்பாவிடம் தட்டிக் கேட்ட போது தன்னை தஞ்சாவூர் ராஜா, சசிகலா புஷ்பா, அமுதா ஆகியோர் மிரட்டியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை முடிவில் சசிகலா புஷ்பா தஞ்சாவூர் ராஜா அமுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது குறித்து பேசிய ராமசாமி தனது வீட்டில் சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்ததாகவும் பகீர் கிளப்பினார்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.15 நாட்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தலைமறைவாக இருக்க கூடாது என்றும் இரண்டு நிபந்தனைகளை சசிகலா புஷ்பாவுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சசிகலா புஷ்பா தலைநகர் டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ராமசாமி சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார் எனவும், மற்றொரு படுக்கையில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் எனக் கூறினார். மேலும் அமுதா என்ற பெண்ணும் இருந்ததாகவும் வீட்டில் மதுபானங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்ததாக கூறினார்.

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவின் பரபரப்பு புகார் கொடுத்த அவரது இரண்டாவது கணவர் தற்போது விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios