conditional bail for vendhar movies madhan
வேந்தர் மூவிஸ் மதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மதனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மதன், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.84 கோடியே 24 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதன் தலைமறைவானார். பணம் கொடுத்தவர்கள் அமலாக்கத்துறையிடம் சென்று மனு கொடுத்தனர்.
இதனிடையே பண மோசடியில் மதனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டார்.

பச்சமுத்துவின் தகவலின் அடிப்படையில் மதனை உடனடியாக கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து திருப்பூரில் பங்களா ஒன்றில் பாதாள அறையில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், வேந்தர் மூவிஸ் மதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மதனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
