கடலூர்

கடலூரில் டி.டி.வி. தினகரனைக் கண்டித்து அவரது உருவ படத்திற்கு பட்டை நாமம் அணிந்த அ.தி.மு.க.வினர் வாய் விட்டு சிரித்து நூதனப் போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் டி.டி.வி. தினகரனை கண்டித்து நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி.யை நீக்கிவிட்டு, அந்த பொறுப்புக்கு புதிதாக காட்டுமன்னார்கோவில் கே.எஸ்.கே. பாலமுருகனை நியமனம் செய்த டி.டி.வி. தினகரனை கண்டித்து திருமுஷ்ணத்தில் அ.தி.மு.க.வினர் வாய்விட்டு சிரித்து நூதனப் போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஒன்றியச் செயலாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பூமாலை கேசவன் முன்னிலை வகித்தார்.

நிர்வாகிகள் குணசேகரன், பழனிவேல், கொளஞ்சிநாதன், ஜோதி பிரகாஷ், வாகீசன், சண்முகம், ஜெயவேல், சின்னப்பன், செந்தில்குமார், மணிகண்டன், திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் சிதம்பரம் காந்தி சிலை அருகில் டி.டி.வி. தினகரன் உருவ படத்தில் பட்டை நாமம் அணிந்து வாய் விட்டு சிரிக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

இதற்கு அவைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். பாண்டியன் எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் டேங்க் சண்முகம், ஜவகர், சாமிநாதன், தில்லைகோபி, முன்னாள் அவைத்தலைவர் ராஜ், மாவட்ட கவுன்சிலர் கர்ணா, நகர துணை செயலாளர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் அசோகன், வேணுபுவனேசுவரன், நாகராஜன் உள்பட நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.