Condemned of central government Opposition to Neet examination - Demonstration at Congress Vellore ...


வேலூர்

மத்திய அரசைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரசு சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

"முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி அதற்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், மாணவிகளின் மரணத்திற்கு காரணமான ‘நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றும் காங்கிரசு சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரசு தலைவர் வழக்குரைஞர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரசு வர்த்தக பிரிவு தலைவர் முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் நாகேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றும் முழக்கமிட்டனர்.