சரக்கு விற்பதில் தகராறு ஏற்பட்டதால் பீர் பாட்டிலால் தாக்கியதில் மதுபான கடையின் கூடுதல் மேற்பார்வையாளர் (அடிசனல் சூப்பர்வைசர்) மண்டை உடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடிமகன்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்த ராமன், ரெட்ஹில்ஸ் காந்திநகர் பகுதி டாஸ்மாக் கடை எண் 8873 கூடுதல் மேற்பார்வையாளராக உள்ளார். கடையை ஒட்டியுள்ள பார் உரிமையாளருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையில் பீர் விற்கக் கூடாது என்றும் பாரில் நான் தான் விற்பனை செய்வேன், அதனை எனக்கு கொடுங்கள். பாரில் வைத்து நான் விற்றுக் கொள்கிறேன் என்று ராமன் தகராறு செய்து வந்துள்ளார்.

பாரில் விற்பதற்கு அனுமதி இல்லை. எனவே பீர் பாட்டில்களை உனக்கு விற்க முடியாது என ராமன் அப்போது அறிவுறுத்தி உள்ளார். அதனால் ஆத்திரம் கொண்ட பார் உரிமையாளர் ராமனை தாக்க பல நாட்களாக பிள்ளான் போட்டுள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையை சோதனையிட வந்த கலால்துறையினர், பாரில் கூடுதலாக இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த ராமன். நேற்று இரவு ராமன் கடையில் இருந்தபோது, அங்கு மது குடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர், ராமனின் மண்டையில் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

சிறிது நேரத்தில் தலையிலிருந்து ரத்தம் அதிகமாக கொட்டியதில் மயக்கமடைந்துள்ளார். பலத்த காயம் அடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு மது அருந்த வந்த குடிமகன்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று கூடுதல் மேற்பார்வையாளரை தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டாஸ்மாக் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது