இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 2ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று மட்டும் 383 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tasmac Sale: தீபாவளி திருநாளில் மதுப் பிரியர்கள் உற்சாகம்.! எத்தனை கோடிக்கு விற்பனை.? எந்த மாவட்டம் முதலிடம் ?

முத்தரசனுக்கு கொரோனா

இந்தநிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

நயன்தாராவுக்கு சிக்கல்..! இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல்..? சுகாதாரத்துறை தகவல்