Asianet News TamilAsianet News Tamil

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியாக செயல்பட விரைவில் குழு... அமைச்சர் பொன்முடி தகவல்!!

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியாக செயல்பட ஒரு குழு நியமிக்கப்படவிருப்பதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

committee will soon be set up for all universities to function in a uniform manner says minister ponmudi
Author
First Published Mar 18, 2023, 11:03 PM IST

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியாக செயல்பட ஒரு குழு நியமிக்கப்படவிருப்பதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாற்றியமைத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பணி நியமனங்கள், தேர்வுக் கட்டணம், என அனைத்தும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: இனி 75% பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி... அன்பில் மகேஷ் அதிரடி!!

இதற்காக ஒரு குழுவை அமைத்து, வெகு விரைவில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், எழுத்தர்கள், பதிவாளர்கள், ஆலோசகர் பதவிகள் உட்பட இவைகளுக்கு எல்லாம், ஒரே மாதிரியான ஊதியம் கொடுப்பதை பற்றியும், மாணவர்களிடம் இருந்து ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிப்பது பற்றியும், ஒரே மாதிரியான நிர்வாகத்தை உருவாக்குவது என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இளம் பெண்களை ஏமாற்றிய பாதிரியார்... லேப்டாப் முழுவதும் ஆபாசப் படங்கள்!

பல்கலைக்கழகங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல், ஒரே மாதிரியான நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios