Asianet News TamilAsianet News Tamil

இளம் பெண்களை ஏமாற்றிய பாதிரியார்... லேப்டாப் முழுவதும் ஆபாசப் படங்கள்!

கன்னிகுமாரியில் பாதிரியார் ஆன்டோவின் லேப்டாப்பில் ஆய்வு செய்த போலீசார் அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாசப் படங்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Benedict Anto absconding, police find obscene videos teenage girls in his laptop
Author
First Published Mar 18, 2023, 10:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிரியார் ஒருவரின் காதல் லீலைகள் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளைக்கு அருகே இருக்கும் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபத்தை அடுத்த பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கிறார். சில நாட்களுக்கு முன் தனது லேப்டாப் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துச் சென்றிருக்கிறார். போலீசார் அதைப்பற்றிய விசாரணையை தொடங்குவதற்குள் சமூக வலைத்தளங்களில் பாதிரியார் ஆன்டோ பல பெண்களுடன் இருக்கும் ஆபாசப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின.

இதன் எதிரொலியாக கடந்த மார்ச் 11ஆம் தேதி ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் இவர்மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். பாதிரியார் ஆன்டோ பேச்சுப்பாறை தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தபோது இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்தப் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்க வைத்து மிரட்டுவதாகவும் குமரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே டார்ச்சர்... மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை... கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

இந்தப் புகாரின் விசாரணை நடத்திய போலீசார் பாதிரியார் ஆன்டோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள், துணிந்து வந்து புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சைபர் க்ரைம் போலீசார் கூறியுள்ளனர்.

இதனிடையே, பாதிரியார் ஆன்டோ பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோகளை இணையத்தில் வெளியிட்டுவிட்டார். ஆன்டோ ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும் படமும் இணையத்தில் பரவிவருகிறது. அந்தப் பெண்ணுக்கு ஆன்டோ தானே கல்யாணமும் செய்துவைத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் தங்கள் வீட்டு பெண்ணின் படங்கள் பரவுவதை தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணையின்போது கைப்பற்றிய பாதிரியாரின் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 80 க்கும் அதிகமான இளம்பெண்களின் ஆபாசப் படங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆன்டோ இன்னும் ஏராளமான பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. தலைமறைவாக இருக்கும் பாதிரியார் ஆன்டோவை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடிவருகிறது.

தஞ்சையில் பயங்கரம்; சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை

Follow Us:
Download App:
  • android
  • ios