Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க சிறப்புக் குழு .. தமிழக அரசு உத்தரவு..

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

committee to formulate new rules for tamil nadu urban localities
Author
Tamilnádu, First Published May 28, 2022, 4:29 PM IST

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிய விதிகளை உருவாகும் குழுவில் நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நகராட்சி , உள்ளாட்சி அமைப்பினரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் கட்டட விதிகள், குடிநீர் விதிகள், கழிவுநீர் விதிகள், குடிநீர் விதிகள், திடக்கழிவு மேலாண்மை  விதிகள் உருவாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசியல்‌ நாகரீகம்‌ பற்றி உங்க தலைவருக்கு முதலில் பாடம் எடுங்க.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி..

வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, வரிவிதிப்பு, உரிய அனுமதி தொடர்பான விதிகளையும் இந்த குழு உருவாக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழு உருவாக்கும் புதிய விதிகளை தொடர்பான அறிக்கையை ஜூன் 10க்குள் சமர்பிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் நகராட்சிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தின் 74 வது திருத்தச் சட்டம் 1992ன் விதிகளின் படி இயங்குகிறது.மிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் மூன்றாம் நிலை பேரூராட்சி, இரண்டாம் நிலை பேரூராட்சி, முதல் நிலை பேரூராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அலர்ட்!! அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..? அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை..

Follow Us:
Download App:
  • android
  • ios