கனகம்மாசத்திரம் அருகேவுள்ள வனப்பகுதியில் மர்மமான முறையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் ஒருவர் இறந்து கிடந்தார்.
அஜித்குமார் (20). இவர் திருவள்ளூர் மாவட்டம், செஞ்சிபனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், அரக்கோணம் பகுதியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை மாலை கனகம்மாசத்திரத்தை அடுத்த காவேரிராஜபுரம் வனப்பகுதியில் அஜித்குமார் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அதனைப் பார்த்தவர்கள் சிலர், 100க்கு அழைத்து தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த அடுத்த சில மணிகளில் கனகம்மாசத்திரம் காவலாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு இறந்துகிடந்த அஜித்குமாரின் சடலத்தைப் பார்வையிட்டனர். பின்னர் அங்கு தடயம் ஏதேனும் கிடைக்கிறதா என்று ஆராய்ந்துப் பார்த்துவிட்டு அஜித்குமாரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
